வீட்டில் அசைவம் சமைத்தால் விளக்கு ஏற்றலாமா…? கூடாதா…?

Spread the love

வீட்டில் அசைவம் சமைத்தால் கண்டிப்பாக விளக்கு ஏற்றக் கூடாது. அதேபோல அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கும் செல்ல கூடாது. அவ்வாறு செய்வது மகா பாவம் எனவும் கூறப்படுகிறது.

பொதுவாக அசைவம் சாப்பிடும் சமயத்தில் வீடு முழுவதும் துர்வாசனை வீசும். அதனால் நல்ல சக்திகள் வீட்டிற்கு வராது.

வீட்டில் விளக்கு ஏற்றினால் தெய்வ சக்திகளை வா என்று அழைப்பதற்கான சமிஞ்சை. அசைவம் சமைத்துவிட்டு விளக்கு ஏற்றினால், நாம் நல்ல சக்திகளை வா என்று அழைத்து விட்டு, உடனுக்குடன் அவமானப்படுத்தியதற்கு சமம்.

இதனால் நமக்கு பிரம்மஹத்தி தோஷத்திற்கு நிகரான தோஷம் ஏற்படும். இதன் காரணமாக பொருளாதாரம் பெரும் அளவில் பாதிக்கப்படும்.

எனவே விட்டில் அசைவம் சமைத்த அடுத்த நாள் காலையில் வீட்டில் வீட்டை கழுவி துர்வாசனை வராத அளவிற்கு சுத்தம் செய்து, குளித்துவிட்டு ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி வீட்டை நல்ல வாசனைகளுக்கு உள்ளாக்கி அதன் பிறகு விளக்கு ஏற்றினால் லட்சுமி கடாட்சம் வரும்.- Source: webdunia

Share this post

Post Comment